Enable Javscript for better performance
அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநரை தாக்கி ரூ. 15 ஆயிரம் பறிப்பு- Dinamani

சுடச்சுட

    

    அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநரை தாக்கி ரூ. 15 ஆயிரம் பறிப்பு

    By மன்னார்குடி  |   Published on : 27th January 2015 02:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மன்னார்குடி பேருந்து நிலையத்திலிருந்து சனிக்கிழமை இரவு 9.30 மணியளவில் விரைவுப் பேருந்து ஒன்று கோவைக்கு புறப்பட்டது. அப்போது, 5 பேர் பேருந்தில் ஏறி நடத்துநரான காலவாய்க்கரை ஓம் சக்தி நகரைச் சேர்ந்த கே. ஆசைத்தம்பியிடம் மேலவாசல் பேருந்து நிறுத்தத்தில் இறங்க வேண்டுமென்று கூறியுள்ளனர்.

    விரைவுப் பேருந்து என்பதால், அங்கு நிற்காது. வேறு பேருந்துதில் செல்லுங்கள் என் று ஆசைத்தம்பி கூறியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த அந்த 5 பேர் ஆசைத்தம்பி மற்றும் ஓட்டுநர் மன்னார்குடி அசேசம் பாரதிதாசன் நகரைச் சேர்ந்த வ. அம்பலவாணன் (52) ஆகியோருடன் தகராறு செய்து விட்டு பேருந்தை விட்டு இறங்கி சென்றுவிட்டனர்.

    இந்நிலையில், பேருந்து மேலவாசல் அருகே அரசு ஆசிரியர் பயிற்சி பள்ளி உள்ள இடம் அருகே சென்றபோது, ஏற்கெனவே தகராறு செய்த 5 பேர் இருச்சக்கர வாகனத்தில் வந்து பேருந்தை நிறுத்தி முன்பக்கக் கண்ணாடியை உடைத்து விட்டு ஓட்டுநர் அம்பலவாணன், நடத்துனர் ஆசைத்தம்பி ஆகியோரை தாக்கினர். மேலும், ஆசைத்தம்பியிடம் இருந்த டிக்கெட் கொடுக்கும் இயந்திரத்தை உடைத்து விட்டு, பணப்பையை பறித்துக்கொண்டு தப்பியோடிவிட்டனர்.

    பணப்பையில் ரூ. 15 ஆயிரம் இருந்துள்ளது. காயமடைந்த அம்பலவாணன், ஆசைத்தம்பி ஆகியோர் மன்னார்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இதுகுறித்து மன்னார்குடி போலீஸார் வழக்குப் பதிந்து, பேருந்தை சேதப்படுத்தி, ஓட்டுநர், நடத்துநரை தாக்கிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai