Enable Javscript for better performance
\\\"நாடு வல்லரசாவதில் மாணவர்களுக்கு பொறுப்புண்டு\\\'- Dinamani

சுடச்சுட

    

    "நாடு வல்லரசாவதில் மாணவர்களுக்கு பொறுப்புண்டு'

    By நாகப்பட்டினம்,  |   Published on : 27th January 2015 02:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாடு வல்லரசாவதில் மாணவர்களுக்கு அதிக பொறுப்புண்டு என்றார் நாகப்பட்டினம் தலைமை அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் எஸ். செந்தில்குமார்.

    நாகப்பட்டினம், பாப்பாக்கோயில் சர் ஐசக் நியூட்டன் கல்வி நிறுவனத்தில் திங்கள்கிழமை குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு கல்வி நிறுவனங்களின் தாளாளர் த. ஆனந்த் தலைமை வகித்தார். விழாவில் பங்கேற்று எஸ். செந்தில்குமார் மேலும் பேசியது:

    இந்தியா வல்லரசாக வேண்டும் என்று அனைவரும் கனவு காண்கிறோம். அதை நிறைவேற்றும் வலிமை மாணவர்களுக்கு மட்டுமே உண்டு. எனவே, அவர்கள் நல்ல முறையில் படித்து, நாட்டை வலிமையானதாக மாற்ற வேண்டும் என்றார்.

    விழாவில் ஊர்க்காவல் படையின் சரக துணைத் தலைவர் ஏ. பஷீர் அகமது, கல்வி நிறுவனங்களின் செயலர் த. மகேஷ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தேர்வுகளில் சிறப்பிடம் பிடித்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai