Enable Javscript for better performance
மயிலாடுதுறையில்இந்திய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    மயிலாடுதுறையில்இந்திய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

    By மயிலாடுதுறை  |   Published on : 27th January 2015 01:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழகத்தில் மீத்தேன் வாயு எடுக்க முயற்சித்து வரும் மத்திய, மாநில அரசுகளின் கொள்கைகளை கண்டித்து, மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ஆர். இடும்பையன் தலைமை வகித்தார்.

    தமிழகத்தில் மீத்தேன் வாயு எடுக்கும் முயற்சியை மத்திய மாநில அரசுகள் கைவிடவேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

    கட்சியின் மயிலாடுதுறை ஒன்றியச் செயலாளர் என். கிருஷ்ணமூர்த்தி, நகர செயலாளர் ஒய்.எஸ்.சர்புதீன், விவசாயத் தொழிலாளர்கள் சங்க செயலாளர் ஆர். ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் பேசினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai