Enable Javscript for better performance
அறிவிப்பின்றி விடுமுறை: சீர்காழியில் \\\"ஆதார்\\\' மையத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்- Dinamani

சுடச்சுட

    

    அறிவிப்பின்றி விடுமுறை: சீர்காழியில் "ஆதார்' மையத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

    By சீர்காழி  |   Published on : 28th January 2015 02:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சீர்காழி, ஜன. 27: சீர்காழியில் ஆதார் புகைப்படம் எடுக்கும் மையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சீர்காழி, கொள்ளிடம் ஒன்றிய, சீர்காழி நகர மக்களில் விடுபட்டவர்களுக்கு ஆதார் அட்டைக்கான புகைப்படம் எடுக்கும் மையம் சீர்காழி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வருகிறது.

    இந்த மையத்தில் கூட்டத்தைத் தவிர்க்கும் வகையில் பயனாளிகளுக்கு முன்கூட்டியே தேதி குறிப்பிட்டு டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி செவ்வாய்க்கிழமைக்கான டோக்கன் பெற்ற கொள்ளிடம், குன்னம், மாதிரவேலூர், எடக்குடி வடபாதி, கீழமாத்தூர், அளக்குடி, செம்மங்குடி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து பயனாளிகள் புகைப்படம் எடுப்பதற்காக காலை 9 மணி முதல் காத்திருந்தனர்.

    ஆனால், காலை 10 மணிக்கு திறக்கப்படவேண்டிய மையம் 11.45 மணியாகியும் திறக்கப்படவில்லை. இதுகுறித்து பொதுமக்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் கேட்டபோது செவ்வாய்க்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, எந்தவித அறிவிப்பும் எழுதிவைக்காமல் விடுமுறை அறிவித்ததால் ஆத்திரமடைந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பிறகு, அவர்கள் வட்டாட்சியர் ராமச்சந்திரனிடம், மையம் திறக்கப்படாதது குறித்து தெரிவித்தனர். வட்டாட்சியரின் நடவடிக்கையை அடுத்து, பகல் 12 மணிக்கு மேல் புகைப்படம் எடுக்கும் பணி தொடங்கியது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai