Enable Javscript for better performance
உதவித்தொகை வழங்கக் கோரி கட்டடத் தொழிலாளர்கள் ஆட்சியரிடம் மனு- Dinamani

சுடச்சுட

    

    உதவித்தொகை வழங்கக் கோரி கட்டடத் தொழிலாளர்கள் ஆட்சியரிடம் மனு

    By DN  |   Published on : 28th January 2015 02:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கட்டடத் தொழிலாளர்களுக்கான உதவித்தொகையை உடனடியாக வழங்க வலியுறுத்தி, காரைக்கால் மாவட்ட கட்டடத் தொழிலாளர் சங்கக் கூட்டமைப்பு தலைவர் வி. மாரியப்பன், செயலர் எஸ். சக்திவேல் உள்ளிட்ட நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியர் இ. வல்லவனிடம் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனர்.

    ஆட்சியரிடத்தில் அவர்கள் அளித்த மனு விவரம்:

    கடந்த 2005-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை சுமார் 45 கட்டடத் தொழிலாளர்கள் இறப்புக்கான உதவித்தொகை குடும்பத்தாருக்கு இதுவரை வழங்கப்படவில்லை. நிலுவையின்றி இத்தொகையை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும். 60 வயதைக் கடந்த தொழிலாளர்களுக்கு தொழிலாளர் துறை சார்பில், உதவித்தொகை வழங்குவதாக அரசு ஒப்புக்கொண்டதை நிறைவேற்ற வேண்டும். கட்டடத் தொழிலாளர் வாரியத்தில் நிலுவையில் உள்ள திருமண உதவித்தொகையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கட்டடத் தொழிலாளர்களின் குழந்தைகள் உயர்கல்வி பயில்வதற்கான உதவித்தொகைக்கு விண்ணப்பித்து இதுவரை தொகை கிடைக்கவில்லை. வாரியத்தில் கடந்த 6 மாதங்களாக புதிய உறுப்பினர் சேர்க்கை நடைபெறவில்லை. இந்தப் பிரச்னைகளைக் களைய ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் வலியுறுத்தி உள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai