Enable Javscript for better performance
காரைக்கால் மீனவ கிராமத்தில் தீ விபத்து- Dinamani

சுடச்சுட

    

    காரைக்கால், ஜன. 27: காரைக்கால் அருகேயுள்ள மீனவ கிராமத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலை நேரிட்ட தீ விபத்தில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள மீன்பிடி வலைகள் தீயில் கருகி நாசமாயின.

    காரைக்கால் மாவட்டம், மண்டபத்தூர் கடலோர கிராமத்தினர் "மத்தி' மீன் பிடிப்பதற்கு என சிறப்பு வலைகளை பயன்படுத்துகின்றனர். இவை விலை அதிகம் என்பதால், மீனவர்கள் பலர் குழுவாக சேர்ந்து வலையை வாங்கியுள்ளனர். இந்த வலைகளை கிராம சமுதாயக் கூடத்தின் வெளிப்பகுதியில் வைத்திருந்தனர். இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை அதிகாலை 5 மணியளவில் வலைகள் வைத்திருந்த பகுதியில் தீப்பிடித்தது தெரியவந்தது. காரைக்கால் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து சென்று தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

    இந்த விபத்தில் சில பகுதியில் இருந்த விலை அதிகமுள்ள மீன்பிடி வலைகள் தீயில் கருகி நாசமாயின. இதன் மதிப்பு லட்சக்கணக்கில் இருக்குமென கூறப்படுகிறது. விசாரணையில், விஜயபாஸ்கர், செல்வம், ரமேஷ் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டோர் வாங்கி வைத்திருந்த வலைகள் சேதமானது தெரியவந்தது.தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து கோட்டுச்சேரி போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.

    மற்றொரு தீ விபத்து: திருப்பட்டினம் காந்தி சாலையில் மளிகை கடை வைத்திருப்பவர் ஷேக் அலாவுதீன். இவர் திங்கள்கிழமை இரவு 10 மணியளவில் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார். இரவு 11 மணியளவில் கடையில் தீப்பிடித்துள்ளது. காரைக்கால் தீயணைப்பு நிலைய வீரர்கள் சென்று தீயை அணைத்தனர். கடையில் ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள பொருள்கள் சேதமானதாகக் கூறப்படுகிறது. தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai