Enable Javscript for better performance
போலி ஆவணம் மூலம் நிலத்தை விற்ற பெண் கைது- Dinamani

சுடச்சுட

    

    போலி ஆவணம் மூலம் நிலத்தை விற்ற பெண் கைது

    By நாகப்பட்டினம்  |   Published on : 28th January 2015 03:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாகப்பட்டினம், ஜன. 27: நாகப்பட்டினம் மாவட்டம், சீர்காழி, தென்பாதியைச் சேர்ந்தவர் முத்துக்குமாரசாமி மகன் அண்ணாதுரை (64). இவருக்கு அந்த பகுதியில் 7 சென்ட் நிலம் சொந்தமாக உள்ளது. இந்த நிலத்தை பராமரிப்பதற்காக அதே பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் மனைவி சுமதியிடம் (50) ஒப்படைத்திருந்தார். இந்த நிலையில், சுமதி அண்ணாதுரை நிலத்துக்கு போலி ஆவணம் தயார் செய்து மற்றொருவரிடம் விற்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து நாகப்பட்டினம் நில அபகரிப்பு பிரிவில் அண்ணாதுரை புகார் அளித்தார். போலீஸார் விசாரணை நடத்தியபோது, உரிய ஆவணங்களுடன் வருவதாகக் கூறிச் சென்ற சுமதி தலைமறைவாகிவிட்டாரம். இதைத் தொடர்ந்து அண்ணாதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

    நீதிமன்ற உத்தரவின்படி, நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து சுமதியை செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சுமதி, நாகப்பட்டினம் நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட்டு, திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai