Enable Javscript for better performance
மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    மத்திய அரசைக் கண்டித்தும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், மயிலாடுதுறையில் காங்கிரஸ் கட்சியினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    காங்கிரஸ் கட்சியின் நாகை (வ) மாவட்ட எஸ்சி, எஸ்டி பிரிவின் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவர் கோவி. மதிவாணன் தலைமை வகித்தார். கட்சியின் நகரத் தலைவர் கே. செல்வம், மாவட்டச் செயலாளர் கே. கமலநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை அனைத்து ஊராட்சிகளிலும் நடைமுறைபடுத்த வேண்டும். நிறுத்தி வைக்கப்பட்டுள்ள முதியோர் உதவித்தொகையை தகுதியுள்ள அனைவருக்கும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

    கட்சியின், நாகை மாவட்ட துணைத் தலைவர் டி. சொக்கலிங்கம், வட்டாரத் தலைவர்கள் ஆர். ராமானுஜம் (மயிலாடுதுறை), கலைமணி (குத்தாலம்), இளைஞர் காங்கிரஸ் வட்டாரத் தலைவர் கே. கல்யாணராமன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai