Enable Javscript for better performance
மயிலாடுதுறை அருகே ஆணைமேலகரம் ஊராட்சியை தத்தெடுத்தார் மணிசங்கர் அய்யர்- Dinamani

சுடச்சுட

    

    மயிலாடுதுறை அருகே ஆணைமேலகரம் ஊராட்சியை தத்தெடுத்தார் மணிசங்கர் அய்யர்

    By DN  |   Published on : 28th January 2015 03:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பிரதமரின் சான்ஷாத் ஆதர்ஷ் கிராம யோஜனா திட்டத்தின் கீழ், நாகை மாவட்டம், மயிலாடுதுறை வட்டம், ஆணைமேலகரம் ஊராட்சியை காங்கிரஸ் மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான மணிசங்கர் அய்யர் செவ்வாய்க்கிழமை தத்தெடுத்தார்.

    இதற்கான விழா மற்றும் மனுநீதிநாள் முகாம் நாகை மாவட்டம், மயிலாடுதுறை வட்டம், ஆணைமேலகரம் ஊராட்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விழாவில் பங்கேற்ற மணிசங்கர் அய்யர் ஆணைமேலகரம் கிராமத்தை முன்மாதிரி கிராமமாக மாற்றத் தத்தெடுத்துக் கொண்ட பிறகு பேசியது:

    2014-15-ம் நிதியாண்டில் கிராம வளர்ச்சி மற்றும் கல்வி, சுகாதாரம், குடிநீர் போன்ற அடிப்படை தேவைகளுக்காக ரூ. 30 லட்சம் கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்தது. திட்டங்கள் அனைத்தும் தில்லியிலிருந்து போடப்படுவதால், கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டாலும், மக்களிடம் அவை சென்றடையும் போது குறைந்துவிடுகிறது. மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் 453 கிராமங்கள் உள்ளன. தற்போது ஆணைமேலகரம் கிராமத்தை முன்மாதிரி கிராமமாக உருவாக்க தத்தெடுத்துள்ளேன். வரும் காலங்களில் இந்த தொகுதியில் உள்ள மேலும் 8 கிராமங்களை தத்தெடுக்க நேரலாம். அனைத்து கிராம மக்களும், அனைத்து வசதிகளையும் பெறவேண்டும். அதற்கானத் திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும் என்றார் மணிசங்கர் அய்யர்.

    விழாவிற்கு தலைமை வகித்த நாகை மாவட்ட ஆட்சியர் சு. பழனிசாமி பேசியது:

     நம்நாடு கிராம சுகாதாரத்தையும், வளர்ச்சியையும் அடிப்படையாகக் கொண்டது. முன்மாதிரி கிராமங்களை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் தொடங்கப்பட்டுள்ள சான்ஷாத் ஆதர்ஷ் கிராம யோஜனா திட்டத்தின் கிராம மக்கள் மனிதவளம், இயற்கை வளம், பாசன வளங்களை முழுமையாகப் பெறலாம். மற்ற கிராமங்களைச் சேர்ந்தவர்களும் இதை முன்மாதிரியாக ஏற்றுக்கொண்டு கிராம வளர்ச்சிக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றார் அவர்.

    விழாவில், மயிலாடுதுறை சார் ஆட்சியர் எஸ். திவ்யதர்ஷினி, சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் எஸ். ராஜகுமார், வட்டாட்சியர் எம்.ஏ. பெருமாள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக, ஊராட்சித் தலைவர் நவாஜூதீன் வரவேற்றார். வட்டார வளர்ச்சி அலுவலர் வாசுதேவன் நன்றி கூறினார். விழாவில், பொதுமக்களிடமிருந்து 350-க்கும் அதிகமான மனுக்கள் பெறப்பட்டன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai