Enable Javscript for better performance
\\\"இந்த முறை வாக்குகளை மடிப் பிச்சையாக தாருங்கள்\\\'- Dinamani

சுடச்சுட

    

    "இந்த முறை வாக்குகளை மடிப் பிச்சையாக தாருங்கள்'

    By வேதாரண்யம்  |   Published on : 15th April 2016 09:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தனக்கு இந்த ஒருமுறை வாக்குகளை மடிப் பிச்சையாகத் தாருங்கள் என வேதாரண்யத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அதிமுக வேட்பாளர் ஓ.எஸ்.மணியன் பேசினார்.

    வேதாரண்யத்தில் அதிமுக செயல் வீரர்கள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. அதிமுக பேச்சாளர் நாஞ்சில் சம்பத், சட்டப்பேரவை உறுப்பினர் என்.வி.காமராஜ், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் எஸ்.டி.ரவிச்சந்திரன், தொகுதி செயலாளர் ஆர்.சண்முகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் தலைமை வகித்து அதிமுக மாவட்டச் செயலாளரும், வேதாரண்யம் தொகுதி வேட்பாளருமான ஓ.எஸ்.மணியன் மேலும் பேசியது:

    வேதாரண்யம் தொகுதியில் 2006-இல் நான் போட்டியிட்டபோது 59 ஆயிரம் வாக்குகள் பெற்றுத் தோற்றேன். அப்போது திமுக அணியில் இருந்த முக்கியமான கட்சிகள் தற்போது தனித்து நிற்கின்றன.

    மேலும் திமுகவில் இருந்த எஸ்.கே.வேதரெத்தினம் அக்கட்சியில் இருந்து வெளியேறி தற்போது பாஜகவில் நிற்கிறார்.

    அதன்பிறகு 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 54 ஆயிரம் வாக்குகள் பெற்று என்.வி.காமராஜ் வெற்றி பெற்றார்.

    இந்த முறை அதிமுக பொதுச் செயலாளரின் கரத்தை வலுப்படுத்த அனைவரும் இரட்டை இலைக்கு வாக்களிக்க வேண்டும் என்றார்.

    கூட்டத்தில் தொகுதி இணைச் செயலாளர்கள் எம்.ஏ.ராதாகிருஷ்ணன், மீரா.ஷேக் மைதீன், ஒன்றியச் செயலாளர்கள் ஆர்.கிரிதரன், அவை.பாலசுப்பிரமணியன், ஒன்றியக் குழுத் தலைவர் சுசீலாதேவி சரவணன், நகர்மன்றத் தலைவர் மலர்கொடி நமசிவாயம், துணைச் செயலாளர் மாவன்னா.சரவணன், மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட துணைச் செயலாளர், ஷேக் மன்சூர், நகரச் செயலாளர், ஷேக் அகமதுல்லா, செயற்குழு உறுப்பினர் அகமதுல்லா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai