Enable Javscript for better performance
குடும்பப் பிரச்னை: அண்ணனை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற தம்பி- Dinamani

சுடச்சுட

    

    குடும்பப் பிரச்னை: அண்ணனை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற தம்பி

    By வேதாரண்யம்  |   Published on : 15th April 2016 09:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வேதாரண்யம் அருகே குடும்பப் பிரச்னை காரணமாக அண்ணனைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற தம்பியை போலீஸார் தேடி வருகின்றனர்.

    புதுப்பள்ளி கிராமம், ஸ்ரீ ராமர்கோயில் பகுதியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மகன்கள் சூரியமூர்த்தி (34), கார்த்திகேயன் (32). இருவருக்கும் திருமணமாகவில்லை. ராமச்சந்திரன் இறந்து விட்டார். அதனால், தாயாருடன் இருவரும் வசித்து வந்தனர்.

    சகோதரர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம்.

    இந்த நிலையில், வியாழக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இருவருக்குமிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.

    ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். அப்போது சூரியமூர்த்தியை நாட்டுத் துப்பாக்கியால் கார்த்திகேயன் சுட்டுக் கொன்றாராம்.  அவரது சடலத்தை மறைப்பதற்காக வேறு இடத்துக்கு கார்த்திகேயன் கொண்டு சென்றபோது அக்கம்பக்கத்தினர் பார்த்து சப்தம் போட்டுள்ளனர்.

    இதனால் சடலத்தைப்போட்டு விட்டு கார்த்திகேயன் தப்பிச் சென்றார். தகவல் அறிந்ததும் போலீஸார் நிகழ்விடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வேட்டைக்காரனிருப்பு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai