Enable Javscript for better performance
சாலை விபத்தில் மூதாட்டி சாவு: தாமதமாக வந்த 108 ஆம்புலன்ஸ் சேதம்- Dinamani

சுடச்சுட

    

    சாலை விபத்தில் மூதாட்டி சாவு: தாமதமாக வந்த 108 ஆம்புலன்ஸ் சேதம்

    By நாகப்பட்டினம்  |   Published on : 15th April 2016 09:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கீழ்வேளூர் அருகே வியாழக்கிழமை இரவு விபத்தில் சிக்கிய மூதாட்டியை மீட்க 108 ஆம்புலன்ஸ் வாகனம் தாமதமாக சென்றதால், ஆவேசமடைந்த பொதுமக்கள் வாகனத்தைச் சேதப்படுத்தினர்.

    கீழ்வேளூர், பட்டமங்கலத்தைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் மனைவி தமிழரசி (50). இவர் வியாழக்கிழமை இரவு கீழ்வேளூர் முத்துமாரியம்மன் கோயிலில் நடைபெற்ற தீமிதித் திருவிழாவுக்குச் சென்று விட்டு, பேருந்தில் பட்டமங்கலம் வந்தார்.

    பட்டமங்கலம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கும்போது பின்னால் வந்த இருசக்கர வாகனம், தமிழரசி மீது மோதியதாம்.

    இதில் பலத்த காயமடைந்த தமிழரசியை அருகிலிருந்தவர்கள் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் வாகனத்துக்குத் தகவல் தெரிவித்தனர். ஆனால், 108 வாகனம் வருவதற்குள் தமிழரசி உயிரிழந்தார். மூதாட்டி உயிரிழந்ததற்கு 108 வாகனம் தாமதமாக வந்ததே காரணம் எனக் கூறி, அங்கிருந்த பொதுமக்கள் 108 வாகனத்தை சேதப்படுத்தினர். அத்துடன் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டம் செய்தனர்.

    தகவலறிந்ததும் கீழ்வேளூர் போலீஸார் அங்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களை சமரசப்படுத்தி தமிழரசியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சாலை மறியலால் ஒரு மணி நேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai