Enable Javscript for better performance
நாகையில் மருத்துவக் கல்லூரி அமைக்கக் கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    நாகையில் மருத்துவக் கல்லூரி அமைக்கக் கோரிக்கை

    By நாகப்பட்டினம்  |   Published on : 15th April 2016 09:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாகப்பட்டினத்தில் மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும் என நாகூர்-நாகப்பட்டினம் வர்த்தக தொழிற் குழுமம் கோரிக்கை விடுத்துள்ளது.

    இக்குழுமத்தின் செயற்குழுக்  கூட்டம் நாகப்பட்டினத்தில் அண்மையில் நடைபெற்றது. கூட்டத்துக்குத் தலைவர் தா. சுந்தரவடிவேலன் தலைமை வகித்தார். துணைச் செயலர் பல்தான் பாண்டி, பொருளாளர் மதன்மோகன், செயற்குழு உறுப்பினர்கள் அருண், ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    "முத்ரா' வங்கிக் கடன் திட்டத்தின் கீழ் வர்த்தகர்களுக்குக் கடன் வழங்க,   வங்கி மேலாளர்கள் அலைக்கழிப்பதைத் தவிர்க்க வேண்டும். நாகப்பட்டினத்தில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும். சிக்கல், வேளாங்கண்ணி, நாகப்பட்டினத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை கருத்தில் கொண்டு, கிராமத்துமேடு என்னும் இடத்தில் உள்ளூர் விமான நிலையம் அமைக்க வேண்டும்.

    நாகப்பட்டினம் முதல் புதுச்சேரி வரையிலான 4 வழிச்சாலையைத்  துரிதமாக அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai