வடுவூர் கோயில் குளத்திலிருந்து லிங்கம் சிலைகள் கண்டெடுப்பு

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே வடுவூர் கோயில் குளத்திலிருந்து சிமெண்டாலான மூன்று லிங்கம் சிலைகள் சனிக்கிழமை கண்டெடுக்கப்பட்டது.

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே வடுவூர் கோயில் குளத்திலிருந்து சிமெண்டாலான மூன்று லிங்கம் சிலைகள் சனிக்கிழமை கண்டெடுக்கப்பட்டது.

வடுவூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீகோதண்டராமர் திருக்கோயில் உள்ளது. இக் கோயிலின் பின்புறம் உள்ள குளத்தில் தண்ணீர் வற்றிவரும் நிலையில் சனிக்கிழமை சாக்குமூட்டை ஒன்று கட்டப்பட்டு இருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து கோயில் நிர்வாகத்தினர், வடுவூர் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்ததை அடுத்து நிகழ்விடத்திற்கு வந்த காவல் ஆய்வாளர் சந்திரா தலைமையிலான போலீஸார், குளத்தில் உள்ள மூட்டையை பிரித்துப் பார்த்தபோது, அதில் சிமெண்டாலான மூன்று லிங்கம் சிலைகள் இருப்பது தெரிய வந்தது.

இவை தலா 2 அடி நீளமும், ஓரடி அகலத்தில் சுமார் 5 கிலோ எடையுடன் இருந்தது. இச் சிலைகளை திருடிக்கொண்டு கோயில் குளத்தில் மர்ம நபர்கள் போட்டிருக்கலாம் என்றும், குளத்தில் தண்ணீர் வற்றியதை அடுத்து சிலைகள் வெளியே தெரிய வந்திருப்பதாக போலீஸார் விசாரணையில் தெரியவந்தது. மேலும் மூன்று லிங்க சிலைகளையும் போலீஸார் காவல்நிலையத்திற்கு கொண்டு சென்றனர். இதுபற்றிய புகாரின் பேரில் வடுவூர் காவல்நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com