Enable Javscript for better performance
வரதட்சிணை கொடுமை: கணவர், மாமியார் மீது வழக்கு- Dinamani

சுடச்சுட

    

    வரதட்சிணை கொடுமை: கணவர், மாமியார் மீது வழக்கு

    By மயிலாடுதுறை  |   Published on : 13th June 2016 07:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    செம்பனார்கோயில் அருகே பெண்ணிடம் வரதட்சிணைக் கேட்டு கொடுமைப்படுத்தியதாக கணவர் மற்றும் மாமியார் மீது போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

     தரங்கம்பாடி வட்டம், செம்பனார்கோயில் காவல் சரகம், பரசலூர் அடுத்த மகாராஜபுரம்  அவ்வையார் நகரைச் சேர்ந்த பீட்டர்  மகன் ஞானப்பிரகாசம்(34). இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த இளவரசி என்பவருக்கும் கடந்த ஓரு வருடத்திற்கு முன்னர் திருமணம் நடைபெற்றுள்ளது.

     திருமணம் நடைபெற்றபோது, இளவரசியின் பெற்றோர் 10 பவுன் நகைகள், சீர் சாமான்கள் மற்றும் மோட்டார்  சைக்கிள்  ஆகியவற்றை வரதட்சிணையாக கொடுத்துள்ளனர்.  இந்நிலையில்  ஞானப்பிரகாசம், இவரது  தாயார்  திலகவதி ஆகியோர்  இளவரசியிடம்  வரதட்சிணை கேட்டு கொடுமைப்படுத்தினராம்.

     இதனால் மனமுடைந்த இளவரசி சனிக்கிழமை வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலைக்கு முயன்றார். இதைத் தொடர்ந்து ஆபத்தான நிலையில்  மீட்கப்பட்டவர் தற்போது மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.   இதுகுறித்து, செய்தியறிந்த செம்பனார்கோயில் போலீஸார் மருத்துவமனைக்குச் சென்று  இளவரசியிடம் வாக்குமூலம்  பெற்று, அவர் அளித்தப் புகாரின் பேரில்  கணவர் ஞானப்பிரகாசம் மற்றும்  மாமியார் திலகவதி  ஆகியோர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai