Enable Javscript for better performance
குருகுலத்தில் பயில ஆதரவற்ற மாணவிகள் விண்ணப்பிக்கலாம்- Dinamani

சுடச்சுட

    

    குருகுலத்தில் பயில ஆதரவற்ற மாணவிகள் விண்ணப்பிக்கலாம்

    By வேதாரண்யம்,  |   Published on : 21st May 2016 01:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாகை மாவட்டம், வேதாரண்யம் கஸ்தூர்பா காந்தி கன்யா குருகுலத்தில் ஆதரவற்ற மாணவிகள் தங்கிப் பயில விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து குருகுலம் நிர்வாக அறங்காவலர் அ. வேதரத்னம் விடுத்துள்ள அறிக்கை:

    குருகுலத்தில் நிகழ் கல்வியாண்டுக்கான மாணவிகள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. தாய், தந்தை இருவரையும் இழந்தவர்கள், தாயை அல்லது தந்தையை இழந்த ஆதரவற்ற பெண் குழந்தைகள் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை இலவச விடுதியில் தங்கி படிக்கலாம். இதர மாணவிகள் 1 முதல் 11-ஆம் வகுப்பு வரை சிறப்பு கட்டணம் செலுத்தி விடுதியில் தங்கிப் பயிலலாம். இதுதொடர்பான மேலும் விவரங்கள், விண்ணப்பங்களை குருகுலம் அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். தபால் மூலம் பெற நிர்வாகி, கஸ்தூர்பா காந்தி கன்யா குருகுலம், வேதாரண்யம் என்ற முகவரிக்கு ரூ.70 மணியார்டர் அனுப்பியும் விண்ணப்பப் படிவத்தை பெற்றுக் கொள்ளலாம்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai