Enable Javscript for better performance
சீர்காழி அரசு மருத்துவமனையில் யோகா, இயற்கை மருத்துவ சிகிச்சைப் பிரிவு தொடக்கம்: யோகா மற்றும் இயற்கை- Dinamani

சுடச்சுட

    

    சீர்காழி அரசு மருத்துவமனையில் யோகா, இயற்கை மருத்துவ சிகிச்சைப் பிரிவு தொடக்கம்: யோகா மற்றும் இயற்கை மருத்துவ சிகிச்சைப் பிரிவை தொடங்கி வைத்து பேசுகிறார் சட்டப்பேரவை உறுப்பினர் பி.வி.பாரதி.

    By DIN  |   Published on : 25th November 2016 09:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சீர்காழி அரசு மருத்துவமனையில் யோகா மற்றும் இயற்கை மருத்துவ சிகிச்சைப் பிரிவு தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
    சீர்காழி சட்டப்பேரவை உறுப்பினர் பி.வி.பாரதி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று யோகா மற்றும் இயற்கை மருத்துவ சிகிச்சைப் பிரிவை திறந்து வைத்தார்.
    விழாவுக்கு முதன்மை தலைமை மருத்துவர் டாக்டர் தேவலதா தலைமை வகித்தார். மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் சந்திரகாந்த், யோகா மற்றும் இயற்கை மருத்துவர் ஜோஷிஹெலன், செம்மங்குடி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கி தலைவர் ராஜமாணிக்கம், நகர கூட்டுறவு வங்கி தலைவர் அ.பக்கிரிசாமி, குழந்தைகள் நல மருத்துவர் மருதவாணன், வழக்குரைஞர் நெடுஞ்செழியன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். மருந்தாளுநர் முரளி வரவேற்றார். சித்த மருத்துவர் ஷாகுல்ஹமீது நன்றி கூறினார்.
    இந்த சிகிச்சைப் பிரிவு நாகை மாவட்டத்தில் முதல்முறையாக சீர்காழி அரசு மருத்துவமனையில் திறக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai