Enable Javscript for better performance
இரட்டைமடி வலை: மீனவர்களுக்கு அபராதம்- Dinamani

சுடச்சுட

    

    வேதாரண்யம் கடல் பரப்பில் தடைவிதிக்கப்பட்ட இரட்டைமடி வலையை பயன்படுத்தி மீன்பிடித்த மீனவர்களுக்கு வெள்ளிக்கிழமை அபராதம் விதிக்கப்பட்டது.
    வேதாரண்யம் கடல் பரப்பில் வெள்ளிக்கிழமை காலை தடைவிதிக்கப்பட்ட இரட்டை மடி வலையை பயன்படுத்தி மீனபிடிப்பதாக மீனவர்களின் அவசர உதவிக்கான எண் 1093-க்கு தகவல் கிடைத்தது.
    இதையடுத்து, துணைக் காவல் கண்காணிப்பாளர் சிவசங்கரன் தலைமையிலான போலீஸார், இந்திய கடற்படை முகாம் வீரர்கள், மீன் வளத்துறையினர் கண்காணிப்புப் பணியை மேற்கொண்டனர்.
    அப்போது, ஆறுகாட்டுத்துறைக்கு கிழக்கே கடல் பரப்பில் ஒரு விசைப் படகில் இருந்த 20 மீனவர்கள் இரட்டை மடி வலையை பயன்படுத்தியது தெரியவந்தது.
    இதையடுத்து, படகில் இருந்த தரங்கம்பாடி கவியரசன், காரைக்கால்மேடு பழனிச்செல்வம், சிவசுந்தரம், சத்ரியன், கலைவாணன், மாரிமுத்து ஆகியோரை அழைத்து வந்து விசாரணை செய்தனர். பின்னர், படகின் உரிமையாளருக்கு அபராதத் தொகை விதிக்க பரிந்துரைத்த போலீஸார், அடுத்த முறையும் இரட்டைமடி வலையை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை செய்து அனுப்பினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai