Enable Javscript for better performance
கல்வி மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டி: 112 பள்ளிகள் பங்கேற்பு- Dinamani

சுடச்சுட

    

    கல்வி மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டி: 112 பள்ளிகள் பங்கேற்பு

    By DIN  |   Published on : 08th October 2016 01:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சீர்காழியில், மயிலாடுதுறை கல்வி மாவட்ட அளவிலான பள்ளிகள் பங்கேற்ற சதுரங்கப் போட்டிகள் வியாழக்கிழமை நடைபெற்றன.
    தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை சார்பில், சீர்காழி பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற சதுரங்கப் போட்டியில் மயிலாடுதுறை கல்வி மாவட்ட அளவிலான தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளி, உயர்நிலை, மேல்நிலை அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என 112 பள்ளிகளைச் சேர்ந்த 157 மாணவ, மாணவிகள் பங்கேற்று விளையாடினர்.
    மாவட்ட உடற்கல்வி ஆய்வர் வி. ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். மயிலாடுதுறை கல்வி மாவட்ட அலுவலர் கே. ராஜேந்திரன், பள்ளி கல்வித்துறை ஆய்வர் திலக், தலைமை ஆசிரியர் ஜெயராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சதுரங்கப் போட்டியை பெஸ்ட் மெட்ரிக் பள்ளி தாளாளர் எஸ்.எஸ்.என். ராஜ்கமல் தொடங்கிவைத்தார். இதில் 11, 14, 17, 19 வயதுக்குள்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இதில் முதல் 3 இடங்களைப் பெற்ற 24 மாணவ, மாணவிகள் தஞ்சை மண்டல கூட்டு மாவட்ட சதுரங்கப் போட்டிக்குத் தகுதிப் பெற்றனர். போட்டிக்கான ஏற்பாடுகளை எஸ். மோகன்ராம், ராஜசேகரன், வாசுதேவன், விஜயக்குமார் ஆகியோர் செய்திருந்தனர். உடற்கல்வி இயக்குநர் முரளிதரன் வரவேற்றார். பெஸ்ட் பள்ளி முதல்வர் ராமலிங்கம் நன்றி கூறினார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai