Enable Javscript for better performance
காரில் கடத்திவரப்பட்ட 824 மதுப்புட்டிகள் பறிமுதல்- Dinamani

சுடச்சுட

    

    காரில் கடத்திவரப்பட்ட 824 வெளி மாநில மதுப்புட்டிகள் மற்றும் கார், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை மயிலாடுதுறை மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸார் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனர்.
    மயிலாடுதுறை மதுவிலக்கு அமல் பிரிவு காவல் ஆய்வாளர் எம். உமாமகேஸ்வரி தலைமையிலான போலீஸார் தரங்கம்பாடி வட்டம், நல்லாடை சோதனைச் சாவடியில் வெள்ளிக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
    அப்போது, அந்த வழியாக வந்த காரை சோதனை செய்ததில், 824 மதுப்புட்டிகள் காரில் இருந்தது. விசாரணையில், காரைக்காலில் இருந்து மதுப்புட்டிகள் கடத்திவரப்பட்டது தெரியவந்தது.
    இதுதொடர்பாக, மயிலாடுதுறை வட்டம், சீனிவாசபுரம் முதல் தெருவைச் சேர்ந்த ராஜு (43), அவரது மனைவி மேரி (35) ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai