Enable Javscript for better performance
காவிரி பிரச்னை: தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    காவிரி பிரச்னை: தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

    By DIN  |   Published on : 08th October 2016 01:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காவிரி பிரச்னையில் மத்திய அரசின் நிலைப்பாட்டை கண்டித்து, இந்திய தொழிற்சங்க மையம் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மன்னார்குடி பந்தலடியில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    சிஐடியூ மாவட்டக்குழு உறுப்பினர் ஜி.ரகுபதி தலைமை வகித்தார். மாவட்டக்குழு உறுப்பினர் டி.ஜெகதீசன், நகரக்குழு உறுப்பினர் கே.முனியாண்டி, அரசு போக்குவரத்துக்கழகப் பிரிவு துணைச் செயலர் ஏ.கோவிந்தராஜ், ஆட்டோ தொழிற் சங்க செயலர் ஏ.ஹரிகரன், விவசாய சங்க நகரச் செயலர் எம்.சிராஜ்தீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக சிஐடியூ மாவட்டப் பொருளாளர் எம்.பி.கே.பாண்டியன் கலந்துகொண்டு கோரிக்கையை விளக்கிப் பேசினார். விவசாயிகள் சங்கம், விவசாயிகள் தொழிலாளர்கள் சங்கங்களைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டு முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai