Enable Javscript for better performance
சாலையோர உணவகங்களில் உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    சாலையோர உணவகங்களில் உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு

    By DIN  |   Published on : 08th October 2016 01:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாகையில் உள்ள சாலையோர உணவகங்களில், உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
    நாகையில் உள்ள ஒரு சாலையோர உணவகத்தில் விற்பனை செய்யப்பட்ட உணவை உண்ட சிலருக்கு ஒவ்வாமை ஏற்பட்டதாக கடந்த 2 நாள்களுக்கு முன்பு தகவல்கள் வெளியாகின.
    இந்தத் தகவலின் பேரில், நாகை நகராட்சி உணவுப் பாதுகாப்பு அலுவலர் ஏ.டி. அன்பழகன், வட்டார உணவுப் பாதுகாப்பு அலுவலர் ஆர். மகாராஜன் ஆகியோர் நாகை புதிய பேருந்து நிலையம், மருத்துவமனை பகுதிகளில் உள்ள சாலையோர மாலை நேர உணவகங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.
    ஆய்வின்போது, கோழி உணவு விற்பனை நிலையங்களில் பயன்படுத்தப்படும் கோழிகள் தரமானதாக இருக்க வேண்டும். அனுமதிக்கப்பட்ட நிறமிகளை, அனுமதிக்கப்பட்ட அளவில் மட்டுமே பயன்படுத்த வேண்டும். பயன்படுத்தப்பட்ட எண்ணெய்யை மீண்டும் பயன்படுத்தக் கூடாது. உணவுப் பொருள்களை மூடி வைத்து விற்பனை செய்ய வேண்டும். பாதுகாக்கப்பட்ட குடிநீரை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என உணவக நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. சாலையோர உணவகங்களில் உணவுத் தயாரிப்புக்குப் பயன்படுத்தும் உணவுப் பொருள்களின் மாதிரிகள் சோதனைக்கு எடுத்து ஆய்வுக்கு அனுப்பப்படும். இந்த ஆய்வில், தரமற்ற உணவுப் பொருள்களைப் பயன்படுத்துவது தெரியவந்தால், தொடர்புடையோர் மீது உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என உணவுப் பாதுகாப்பு அலுவலர் ஏ.டி. அன்பழகன் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai