Enable Javscript for better performance
சீர்காழி அருகே குடிசை தீக்கிரை- Dinamani

சுடச்சுட

    

    சீர்காழி அருகே வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் குடிசை வீடு தீக்கிரையானது.
    சீர்காழி அருகேயுள்ள புதுத்தெரு கிராமத்தைச் சேர்ந்தவர் க. சித்ரா. வெள்ளிக்கிழமை மின் கசிவு காரணமாக இவரது குடிசை வீடு தீப்பிடித்து எரிந்தது. இதில் வீட்டு உபயோகப் பொருள்கள் முற்றிலும் எரிந்து சேதமடைந்தன. தகவலறிந்த சீர்காழி வட்டாட்சியர் மலர்விழி, அங்கு சென்று தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி, அரசின் உதவித் தொகையான ரூ. 5 ஆயிரம், அரிசி, வேட்டி, சேலை, மண்ணெண்ணெய் உள்ளிட்டவற்றை வழங்கினார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai