Enable Javscript for better performance
சூழல் மேம்பாடு போட்டி: மாணவர்களுக்குபரிசளிப்பு- Dinamani

சுடச்சுட

    

    வேதாரண்யத்தை அடுத்த பஞ்சநதிக்குளம் மேற்கு நக்கீரனார் பள்ளியில் சுற்றுச்சூழல் மேம்பாடு குறித்த கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வெள்ளிக்கிழமை பரிசுகள் அளிக்கப்பட்டன.
    உலக அரிமா தினத்தையொட்டி, ஆயக்காரன்புலம் அரிமா சங்கம், பஞ்சநதிக்குளம் நக்கீரனார் நடுநிலைப் பள்ளி ஆகியவை இணைந்து மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் மேம்பாடு குறித்த கட்டுரைப் போட்டிகளை நடத்தின.
    விழாவுக்கு அரிமா சங்கத் தலைவர் ப. பார்த்தசாரதி தலைமை வகித்தார். பள்ளி தாளாளர் ஆ. வீராச்சுவாமி முன்னிலை வகித்தார்.
    வணிகர் சங்க நிர்வாகிகள் வேதை. முருகையன், என்.டி. ராமஜெயம், செம்பை புலவர் முருகையன், தலைமை ஆசிரியர் வீ. பாரதி, தமிழாசிரியர் வி. சத்தியசிவம் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர். விழாவில், போட்டியில் சிறப்பிடங்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் அளிக்கப்பட்டன.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai