Enable Javscript for better performance
தெரு முனைகளில் கருப்பு கயிறு சுற்றப்பட்ட எலுமிச்சை, தகடு: நாகையில் பரபரப்பு- Dinamani

சுடச்சுட

    

    தெரு முனைகளில் கருப்பு கயிறு சுற்றப்பட்ட எலுமிச்சை, தகடு: நாகையில் பரபரப்பு

    By DIN  |   Published on : 08th October 2016 01:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாகை 28 ஆவது வார்டில் உள்ள தெரு முனைகளில் கருப்பு நிற கயிறு சுற்றப்பட்ட எலுமிச்சை மற்றும் தகடு வெள்ளிக்கிழமை கண்டெடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    நாகை மருந்து கொத்தள சாலை பகுதியில் 28 ஆவது வார்டு உள்ளது. இப்பகுதியில் உள்ள தீமிதி திடல், சுண்ணாம்புக் கால்வாய் தெரு உள்ளிட்ட பகுதிகளில் தெரு முனைகளிலும், சிலரது வீட்டின் முன்புறமும் சிறிய அளவிலான எலுமிச்சைப்பழம் கண்டெடுக்கப்பட்டது. மேலும், எலுமிச்சைப்பழம் முழுவதும் கருப்பு நிற நூலால் சுற்றப்பட்டிருந்தது. சுண்ணாம்புக் கால்வாய் தெருவில் கருப்பு நிற நூலால் சுற்றப்பட்ட சிறிய அளவிலான தகடு கண்டெடுக்கப்பட்டது.
    இதுகுறித்து அப்பகுதியினர் கூறியது: காலையில் எழுந்தபோது கருப்பு நிற கயிறு கட்டப்பட்ட எலுமிச்சைப்பழம் வைத்திருப்பது தெரிய வந்தது. யார் வைத்தனர், எதற்காக வைத்தனர் என்பது இன்னும் புரியவில்லை. மேலும், அதிகாலை நேரத்திலேயே இது வைக்கப்பட்டிருக்க வேண்டும். கருப்பு நிற கயிறு சுற்றப்பட்டிருப்பதால், மாந்திரீகம் செய்யப்பட்டு வைக்கப்பட்டிருப்பதற்கான வாய்ப்பு உள்ளது என்றனர்.
    உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு, ரத்து செய்யப்பட்டிருக்கும் நிலையில், அரசியல் ரீதியாக இந்த செயல்களை யாராவது செய்திருக்கலாம் எனவும் ஒரு சிலர் கருதுகின்றனர். கருப்பு நிற கயிறு சுற்றப்பட்ட எலுமிச்சை, தகடு கண்டெடுக்கப்பட்டிருப்பது 28 ஆவது வார்டு பகுதி மக்களிடையே பரபரப்பையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai