Enable Javscript for better performance
நேரடி நெல் விதைப்பு வேளாண் பணிகள் ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    நாகை மாவட்டத்தில் நடைபெறும் நேரடி நெல் விதைப்பு வேளாண் பணிகளை மாவட்ட ஆட்சியர் சு. பழனிசாமி வெள்ளிக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    கீழையூர் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட திருவாய்மூர், எட்டுக்குடி, திருக்குவளை ஆகிய பகுதிகளில் 2,436 ஹெக்டேர் பரப்பிலும், தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட துளசாபுரம், உம்பளச்சேரி, மகாராஜபுரம் மேற்கு, மணக்குடி ஆகிய பகுதிகளில் 4,050 ஹெக்டேர் பரப்பிலும் மேற்கொள்ளப்படும் நேரடி நெல் விதைப்பு வேளாண் பணிகளை ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    பின்னர், வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பிராந்தியங்கரை பகுதியில் 735 ஹெக்டேர் பரப்பிலும், கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பட்டமங்கலம், கிள்ளுக்குடி, சாட்டியக்குடி ஆகிய பகுதிகளில் 2,574 ஹெக்டேர் பரப்பிலும் மேற்கொள்ளப்படும் நேரடி நெல் விதைப்பு வேளாண் பணிகளையும் அவர், பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    நாகை மாவட்ட வேளாண் இணை இயக்குநர் சேகர், வேளாண் துணை இயக்குநர் (மாநிலத் திட்டம்) கணேசன், வட்டார உதவி இயக்குநர்கள் சந்திரகாசன், கிருபாகரன், பாலசுப்பிரமணியன், வட்டாட்சியர்கள் அமுதவிஜயரங்கன், இளங்கோவன், சுதாராணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai