Enable Javscript for better performance
முள்ளியாற்றை தூர்வாரக் கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    திருத்துறைப்பூண்டி - வேதாரண்யம் பகுதி வழியாகச் செல்லும் முள்ளியாற்றை தூர்வார வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி பகுதி வழியே வேதாரண்யம் பகுதிக்குள் செல்கிறது முள்ளியாறு. இது வெண்ணாறு கோட்டத்தின் முக்கிய பாசன ஆறாகவும், வடகிழக்குப் பருவ காலத்தில் காவிரி படுகையின் முக்கிய வடிகால் ஆறாகவும் திகழ்கிறது. இந்த ஆறு கடந்த பல ஆண்டுகளாக முறையாக தூர்வாரப்படாததால், ஆற்றினுள் வெங்காயத்தாமரை செடிகள், கருவேல மரங்கள் மண்டிக் கிடக்கின்றன. இதனால், கடைமடை பகுதியான முள்ளியாற்றின் பாசனப் பகுதிக்கு இதுவரை காவிரி நீர் வந்து சேரவில்லை. எனவே, முள்ளியாற்றை தூர்வார சம்பந்தப்பட்ட துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் வலியுறுத்தலாக உள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai