Enable Javscript for better performance
அம்மா திட்ட முகாம்- Dinamani

சுடச்சுட

    

    குத்தாலம் வட்டத்தில் 3 கிராமங்களில் அம்மா திட்ட மனுநீதி முகாம் வெள்ளிக்கிழமை  நடைபெற்றது.
     வீட்டுமனைப் பட்டா, குடும்ப அட்டை பெயர் சேர்ப்பு மற்றும் பெயர் நீக்கம், பட்டா மாற்றம், முதியோர் உதவித்தொகை போன்ற விண்ணப்பங்களை பெற்றுக் கொண்டனர்.   
     சென்னியநல்லூர் வருவாய் கிராமத்தில் நடைபெற்ற முகாமில் வட்டாட்சியர் இந்துமதி, வருவாய் ஆய்வாளர் சதீஷ்குமார், கிராம நிர்வாக அலுவலர் கஜேந்திரன் கலந்து கொண்டனர்.
     சிவனாகரம் வருவாய் கிராமத்தில் நடைபெற்ற முகாமில் சமூகப் பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் விஜயராகவன், வருவாய் ஆய்வாளர் கவிதாஸ், கிராம நிர்வாக அலுவலர் நாராயணன், ஊராட்சி மன்றத் தலைவர் திலகவதி நீலமேகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
     ஆனந்தநல்லூர் வருவாய் கிராமத்தில் நடைபெற்ற முகாமில் வட்ட வழங்கல் அலுவலர் ராகவன், வருவாய் ஆய்வாளர்கள் ராஜேந்திரன், மூர்த்தி, கிராம நிர்வாக அலுவலர் மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai