Enable Javscript for better performance
இன்று  இலவச கண் பரிசோதனை முகாம்- Dinamani

சுடச்சுட

    

    மயிலாடுதுறை அடுத்துள்ள பேச்சாவடியில் இலவச கண் பரிசோதனை முகாம் சனிக்கிழமை நடைபெறவுள்ளது.
    டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் பிறந்தநாள், பன்னாட்டு லயன்ஸ் சங்கங்களின்  நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, நாகை மாவட்ட பார்வை இழப்புத் தடுப்பு சங்கம் மாயூரம் லயன்ஸ் சங்கம், உறவுகள் பவுன்டேஷன், டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் ரத்ததான சேவை மையம் மற்றும் பாண்டிச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை ஆகியவை இணைந்து இம்முகாமை நடத்துகின்றன.
    பேச்சாவடியில்  உள்ள ஒரு திருமண மண்டபத்தில், சனிக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறும் இம்முகாமில், கண்புரை, கண் நீர்  அழுத்த நோய், குழந்தைகளின் கண் நோய், சர்க்கரை நோய் ஆகியவை குறித்து பரிசோதனை செய்யப்பட்டு மருத்துவ உதவிகள் செய்யப்படும்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai