Enable Javscript for better performance
கார் கண்ணாடியை உடைத்து ரூ.2 லட்சம் திருட்டு- Dinamani

சுடச்சுட

    

    சீர்காழியில் பட்டப்பகலில் வியாபாரியின் கார் கண்ணாடியை உடைத்து  ரூ.2 லட்சம் திருட்டுப் போனது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
    சீர்காழி தென்பாதி வி.என்.எஸ்.நகரைச் சேர்ந்தவர் வே.ராமு(55). இவர் இறால் பண்ணை வைத்துள்ளார். இந்நிலையில் வெள்ளிக்கிழமை சீர்காழி பிடாரி வடக்கு வீதியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியிலிருந்து ரூ.2 லட்சத்தை எடுத்துக்கொண்டு சீர்காழி கொள்ளிட முக்கூட்டு பகுதியில் உள்ள உணவகத்துக்கு சென்றுள்ளார். பின்னர் வந்து பார்த்தபோது காரின் பக்கவாட்டு கண்ணாடி உடைக்கப்பட்டு உள்ளே இருந்த ரூ.2 லட்சம் திருட்டுப் போனது தெரியவந்தது. இதுகுறித்து சீர்காழி குற்றவியல் பிரிவு போலீஸாரிடம் புகார் அளித்தார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai