Enable Javscript for better performance
கூடைப்பந்து போட்டி: சீர்காழி பள்ளி சிறப்பிடம்- Dinamani

சுடச்சுட

    

    சீர்காழியில் நடைபெற்ற மயிலாடுதுறை கல்வி மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டியில் சீர்காழி ச.மு.இ.மேல்நிலைப்பள்ளி சிறப்பிடம் பெற்றது.
     மயிலாடுதுறை கல்வி மாவட்ட அளவிலான தனியார், அரசு, அரசு உதவிபெறும்  பள்ளிகளைச் சேர்ந்த 96 மாணவ-மாணவிகள் பங்கேற்ற கூடைப்பந்து போட்டி சீர்காழி எல்.எம்.சி. விளையாட்டு மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
    போட்டிகளை நாகை மாவட்ட உடற்கல்வி ஆய்வர் ராதாகிருஷ்ணன், முன்னாள் ச.மு.இ. பள்ளி உடற்கல்வி ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி தொடங்கிவைத்தனர். போட்டியில் 17 வயதுக்குள்பட்ட மாணவிகள் பிரிவில் சீர்காழி ச.மு.இ.மேல்நிலைப்பள்ளி மாணவிகள் முதலிடத்தையும், மயிலாடுதுறை செயின்ட்பால்ஸ் மெட்ரிக் பள்ளி மாணவிகள் இரண்டாமிடத்தையும் பெற்றனர்.
    17 வயதுக்குள்பட்ட மாணவர்கள் பிரிவில் சீர்காழி ச.மு.இ.மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் முதலிடத்தையும், மயிலாடுதுறை தேசிய மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் இரண்டாமிடத்தையும் பெற்றனர். இதேபோல் 19 வயதுக்குள்பட்ட மாணவிகள் பிரிவில் மயிலாடுதுறை குருஞான சம்பந்தர் மிஷன் பள்ளி மாணவிகள் முதலிடத்தையும், சீர்காழி ச.மு.இ.மேல்நிலைப்பள்ளி மாணவிகள் இரண்டாமிடத்தையும் பெற்றனர்.  19 வயதுக்குள்பட்ட மாணவர்கள் பிரிவில் சீர்காழி ச.மு.இ.மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் முதலிடத்தையும், மயிலாடுதுறை குருஞானசம்பந்தர் மிஷன் பள்ளி மாணவர்கள் இரண்டாமிடத்தையும் பெற்றனர்.
     இதன் மூலம் சீர்காழி ச.மு.இ.மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் சிறப்பிடம் பெற்றனர். வெற்றி பெற்ற பள்ளிகளைச் சேர்ந்த மாணவ-மாணவிகளின் கூடைப்பந்தாட்ட அணியினர் தஞ்சை மண்டல அளவிலான கூட்டு மாவட்ட பள்ளிகள் பங்குபெறும் விளையாட்டு போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
    இந்தப் போட்டியானது நவம்பர் முதல் வாரத்தில் நடைபெறவுள்ளது. போட்டிக்கான ஏற்பாடுகளை குறுவட்ட விளையாட்டுப் போட்டிகளுக்கான செயலர் முரளிதரன் செய்திருந்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai