Enable Javscript for better performance
சிக்கல் அரசு மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி- Dinamani

சுடச்சுட

    

    சிக்கல் அரசு மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி

    By DIN  |   Published on : 15th October 2016 07:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாகை அருகே சிக்கல் அரசு மேல்நிலைப்பள்ளியில்  அறிவியல் கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
     இந்த கண்காட்சியில் வாயு அழுத்தத்தில் விண்ணில் செல்லும் ராக்கெட், சுற்றுப்புற சூழ்நிலையை விளக்கும் அமைப்பு, அமில மழையால் ஏற்படும் பாதிப்பு, பறக்கும் ரயில் உள்ளிட்ட தலைப்புகளில் மாணவர்கள் அமைத்திருந்த அரங்குகள் காண்போரை கவர்ந்தன.  பள்ளி தலைமை ஆசிரியர் எம். ஜெகதீசன் கண்காட்சியை தொடங்கி வைத்தார்.
    இந்த கண்காட்சியில் முதலிடம் பெற்ற மாணவர்கள் அக்.18 ஆம் தேதி வேதாரண்யத்தில் நடைபெற உள்ள மாவட்ட அளவிலான கண்காட்சியில் பங்கேற்பர்.
    கண்காட்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள் செய்திருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai