Enable Javscript for better performance
திட்டச்சேரி பகுதிகளில் நாகை எம்எல்ஏ ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    திட்டச்சேரி பேரூராட்சி பகுதிகளில் நாகை சட்டப்பேரவை உறுப்பினர் தமிமுன் அன்சாரி வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
     திட்டச்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்குச் சென்று மருத்துவப் பரிசோதனைகள் குறித்து பொதுமக்களிடமும், மருத்துவமனைக்கான தேவைகள் குறித்து மருத்துவர் மற்றும் செவிலியர்களிடமும் கேட்டறிந்தார்.
    பின்னர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டபோது, பள்ளிக்கு இன்னும் 6 ஆசிரியர்கள் நிரப்பப்படவில்லை எனவும், பள்ளியில் உள்ள 12 கணினிகள் பழுதாகியுள்ளன எனவும் 6,7-ஆம் வகுப்பு மாணவர்கள் தரையில் அமர்ந்து படித்து வருவதாகவும், அவர்களுக்கு அமரும் பலகை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதுகுறித்து ஆவன செய்வதாக நாகை எம்எல்ஏ கூறினார்.
    இதையடுத்து அரசு மேல்நிலைப்பள்ளி சத்துணவு மையம், அரசு உயர்நிலைப்பள்ளி, தொடக்கப்பள்ளி ஆகியவற்றை பார்வையிட்டார்.
      தொடக்கப்பள்ளியில் மாற்றுத்திறனாளிகள் பயிலும் வகுப்புக்குச் சென்று, அவர்களுடன் அமர்ந்து பேசினார். அவர்களுக்கு உரிய உதவிகள் வழங்கப்படும் என அவர் உறுதியளித்தார்.
      பின்னர் பேரூராட்சி அலுவலகத்துக்கு சென்று, பேரூராட்சி தலைவர் மற்றும் உறுப்பினர்களிடம் பேசியபோது, அங்குள்ள அங்காடியை இரண்டாகப் பிரிக்க வேண்டும், நூலகத்துக்கு அரசு கட்டடம் தேவை என்ற அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
      ஆய்வின்போது ஒன்றியக்குழு துணைத் தலைவர் ராதாகிருட்டிணன், பேரூராட்சி தலைவர் ரவிச்சந்திரன், அதிமுக பேரூராட்சி செயலர் அப்துல் பாசித், திட்டச்சேரி கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் செய்யது இப்ராகிம், மஜக மாவட்ட செயலர் செய்யது ரியாசுதீன், மாவட்ட முன்னாள் செயலர் முபாரக் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai