Enable Javscript for better performance
நாகையில் அக்டோபர் 15 மின் தடை- Dinamani

சுடச்சுட

    

    நாகை மற்றும் சுற்றுப் பகுதிகளில் சனிக்கிழமை (அக். 15) மின் விநியோகம் நிறுத்தப்படும் எனநாகை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
    நாகை, திருமருகல், வேட்டைக்காரனிருப்பு ஆகிய துணை மின் நிலையங்களில் சனிக்கிழமை பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்படவுள்ளது. இதையொட்டி, இந்தத் துணை மின் நிலையங்களிலிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அவர் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
    துணை மின் நிலையங்கள் வாரியாக மின் விநியோகம் தடைபடும் பகுதிகள்:  நாகை: நாகை, வேளாங்கண்ணி, நாகூர், வெளிப்பாளையம், திட்டச்சேரி, ஓ.என்.ஜி.சி, மஞ்சக்கொல்லை, பரவை, பொய்கைநல்லூர், சிக்கல், தோணித்துறை.
     திருமருகல்: திருமருகல், மருங்கூர், எரவாஞ்சேரி, திருப்புகளூர், சீயாத்தமங்கை, போலகம், திருக்கண்ணபுரம். வேட்டைக்காரனிருப்பு: திருப்பூண்டி, புதுப்பள்ளி, காமேஸ்வரம், விழுந்தமாவடி, வேட்டைக்காரனிருப்பு, கோவில்பத்து, வெள்ளப்பள்ளம், நாலுவேதபதி, தாமரைப்புலம்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai