Enable Javscript for better performance
நாகை மாவட்ட சிறைகளில் ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    நாகை மாவட்டத்தில் உள்ள சிறைகளில் 18 வயதுக்குள்பட்ட சிறுவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனரா என்பது குறித்து குழந்தைகள் பாதுகாப்பு அலகு வல்லுநர் குழுவினர் அண்மையில் ஆய்வு மேற்கொண்டனர்.
    நாகை மாவட்டத்தில் உள்ள சிறைகளில் 18 வயதுக்குள்பட்ட சிறுவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனரா என்பது குறித்து ஆய்வு செய்ய, மாவட்ட ஆட்சியர் உத்தரவுப்படி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மூலம் வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
     மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ரோஸ்லின் ஜாய்ஸ் கிரேஸ் தலைமையிலான இக்குழுவில், நன்னடத்தை அலுவலர்கள் முருகானந்தம், பிரேமலதா, இலவச சட்டப்பணிகள் ஆணைக் குழு வழக்குரைஞர் மலர்மாலை, சமூக ஆர்வலர் கிருஷ்ணகுமார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்தக் குழு, 3 மாதங்களுக்கு ஒரு முறை சிறைகளில் ஆய்வு மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி,  நாகை மாவட்டம், மயிலாடுதுறை, பொறையாறு, சீர்காழி ஆகிய கிளைச் சிறைகளிலும், நாகப்பட்டினத்தில் உள்ள மாவட்ட சிறையிலும் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
    இந்த ஆய்வுகளின் நிறைவில், நாகை மாவட்டத்தில் உள்ள சிறைகளில் 18 வயதுக்குள்பட்ட சிறுவர்கள் யாரும் தங்கவைக்கப்படவில்லை என குழந்தைகள் பாதுகாப்பு அலகு வல்லுநர் குழு அறிவித்துள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai