Enable Javscript for better performance
நீர் நிலைகள் சீரமைப்புப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்: ஆட்சியர்  அறிவுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    நீர் நிலைகள் சீரமைப்புப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்: ஆட்சியர்  அறிவுறுத்தல்

    By DIN  |   Published on : 15th October 2016 07:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நீர்நிலைகள் சீரமைப்புப் பணிகளை விரைவாகவும், தரமாகவும் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார் நாகை மாவட்ட ஆட்சியர் சு. பழனிசாமி.
    நாகையை அடுத்த ஐவநல்லூர், புதிய நம்பியார் நகர் பகுதிகளில் நடைபெறும் வாய்க்கால், குளங்கள் சீரமைப்புப் பணிகளை ஆட்சியர் வெள்ளிக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    ஐவநல்லூர் ஊராட்சி சவேரியார் நகர் தேவநதி வாய்க்காலைப் பார்வையிட்ட ஆட்சியர், கால்வாயை உடனடியாக தூர்வாரி சீரமைக்க பொதுப் பணித் துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
    பின்னர், புதிய நம்பியார் நகர் நாடார் குளத்தைப் பார்வையிட்ட அவர், அந்தக் குளத்தை தூர்வாரி சீரமைக்குமாறு நகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டார். மூர்த்தி குளத்தில் நடைபெறும் சீரமைப்புப் பணிகளை ஆய்வு செய்த அவர், பணிகளை விரைந்து நிறைவேற்றுமாறு அறிவுறுத்தினார்.
    நகராட்சி ஆணையர் ஜான்சன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சந்தானம், முருகேசன், நகராட்சிப் பொறியாளர்கள் வசந்தன், மணிவண்ணன் மற்றும் அரசுத் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai