Enable Javscript for better performance
பேரிடர் குறைப்பு தின ஒத்திகை- Dinamani

சுடச்சுட

    

    நாகப்பட்டினம், பாப்பாக்கோவில் சர் ஐசக் நியூட்டன் கல்லூரியில்,  பேரிடர் மேலாண்மை ஒத்திகை நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
        தேசிய பேரிடர் குறைப்பு தினத்தையொட்டி நடைபெற்ற இந்த ஒத்திகை நிகழ்ச்சிகளை, நாகை மாவட்ட ஆட்சியர் சு. பழனிசாமி தொடங்கி வைத்தார்.
        தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மாவட்ட அலுவலர் முகுந்தன் தலைமையிலான தீயணைப்புப் படையினர் பேரிடர் மேலாண்மை ஒத்திகை நிகழ்ச்சிகளை நடத்தினர்.
        வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சந்தானம், முருகேசன், சர் ஐசக் நியூட்டன் கல்லூரித் தாளாளர் த. ஆனந்த், அரசுத் துறை அலுவலர்கள், கல்லூரி பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
    சீர்காழியில்...
     சீர்காழியை அடுத்த பழையாரில் பேரிடர் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
     சர்வதேச பேரிடர் குறைப்பு நாளையொட்டி  பழையார் துறைமுகம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மயிலாடுதுறை கோட்டாட்சியர் சுபாநந்தினி தலைமை வகித்தார். சீர்காழி வட்டாட்சியர் மலர்விழி முன்னிலை வகித்தார்.
     சீர்காழி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை நிலைய அலுவலர் ரவிச்சந்திரன் பங்கேற்று பேரிடர் காலங்களில் பொதுமக்கள் தங்களைத் தற்காத்துக் கொள்வது  குறித்த ஒத்திகை செய்து காண்பிக்கப்பட்டது.
     வருவாய் ஆய்வர்கள் தட்சிணாமூர்த்தி, செல்வக்குமார், ரஜினி, தீயணைப்பு வீரர்கள் ரமேஷ், ஹாஜாமொய்தீன் மற்றும் மீனவ கிராம மக்கள் பங்கேற்றனர்.
    குத்தாலத்தில்...
    சர்வதேச பேரிடர் குறைப்பு தினத்தை முன்னிட்டு குத்தாலத்தில் பேரிடர் குறைப்பு குறித்த செயல்முறை விளக்க நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
      பேரூராட்சி மன்றத் தலைவர் எம்.சி.பாலு தலைமை வகித்தார். செயல் அலுவலர் சதீஷ்குமார் முன்னிலை வகித்தார்.  
      குத்தாலம் ராஜ் வித்யாலயா பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற பேரிடர் குறைப்பு தின விழிப்புணர்வு பேரணியை வட்டாட்சியர்  இந்துமதி கொடியசைத்து  தொடங்கி வைத்தார். சமூக பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியர் விஜயராகவன், மண்டல துணை வட்டாட்சியர் முருகானந்தம், வருவாய் ஆய்வாளர் சதீஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai