Enable Javscript for better performance
பொதுச் சேவை மையங்களில் வண்ண வாக்காளர் அடையாள அட்டை- Dinamani

சுடச்சுட

    

    தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி நிறுவனம் மூலம் செயல்படும் பொதுச் சேவை மையங்களில், வண்ண வாக்காளர் அடையாள அட்டை வழங்கும் சேவை தொடங்கப்பட்டுள்ளது என நாகை மாவட்ட ஆட்சியர் சு. பழனிசாமி தெரிவித்துள்ளார்.
    இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
    தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி நிறுவனம் மூலம் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்கள் உள்பட தமிழகத்தில் 486 இடங்களில் அரசு பொதுச் சேவை (இ-சேவை) மையங்கள் செயல்படுகின்றன.  
    இந்த மையங்கள் மூலம், மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு சேவைகளைப் பொதுமக்கள் ஒரே இடத்தில் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. தற்போது, முதல் கட்டமாக அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்கள் உள்பட 302 மையங்களில் வாக்காளர் அடையாள அட்டை வழங்கும் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
    பொதுமக்கள் யாருக்கேனும் வண்ண வாக்காளர் அடையாள அட்டை தேவையெனில், வட்டாட்சியர் அலுவலகங்களில் உள்ள பொதுச் சேவை மையத்தில் தங்கள் வாக்காளர் அடையாள அட்டை எண்ணைத் தெரிவித்து, ரூ.25 கட்டணமும் செலுத்தி வண்ண வாக்காளர் அடையாள அட்டையைப் பெறலாம் என ஆட்சியர் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai