Enable Javscript for better performance
மனவளர்ச்சி குன்றியோர் பள்ளிக்கு திருவாவடுதுறை ஆதீனம் வருகை- Dinamani

சுடச்சுட

    

    மனவளர்ச்சி குன்றியோர் பள்ளிக்கு திருவாவடுதுறை ஆதீனம் வருகை

    By DIN  |   Published on : 15th October 2016 07:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மயிலாடுதுறை தருமபுரம் சாலையில் உள்ள அன்பகம் மாற்றுத் திறனாளி குழந்தைகள் பள்ளிக்கு திருவாவடுதுறை ஆதீனம் 24-ஆவது குருமகா சன்னிதானம் சீர்வளர்சீர் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்  சனிக்கிழமை  வந்தார்.
    அங்குள்ள மாணவ, மாணவிகளுக்கு அருளாசி வழங்கினார்.  குழந்தைகளுக்கு உணவுப் பொருள்களையும் வழங்கினார்.
    துலாக்கட்ட காவிரியில்
    வழிபாடு: முன்னதாக, ஐப்பசி மாதத்தில் மயிலாடுதுறையில்  நடைபெறவுள்ள துலா உற்சவ விழாவை முன்னிட்டு, துலாக்கட்ட காவிரிக்குச் சென்று, அங்கு செய்யவேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து, மயூரநாதர் கோயில் பணியாளர்களிடம்  கேட்டறிந்தார். தொடர்ந்து, காவிரியில் மலர் தூவி வழிபாடு மேற்கொண்டார். இந்நிகழ்ச்சிகளில், மயூரநாதர் கோயில் கண்காணிப்பாளர் எஸ்.குருமூர்த்தி, அன்பகம் மாற்றுத்திறனாளி பள்ளியின் நிர்வாகிகள் ஞானசம்பந்தம், கலாவதி ஆகியோர் கலந்துகொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai