Enable Javscript for better performance
மனைவியை கொன்ற கணவனுக்கு ஆயுள் தண்டனை- Dinamani

சுடச்சுட

    

    கீழ்வேளூர் அருகே மனைவியை கொலை செய்த கணவனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நாகை மகளிர் விரைவு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது.
    கீழ்வேளூர் அருகே ராதாமங்கலத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து (28). கொத்தனார். இவரது மனைவி வசந்தி. மாரிமுத்துவுக்கு அதே பகுதியைச் சேர்ந்த வேறொரு பெண்ணுடன் தொடர்பு உள்ளதாக வசந்தி சந்தேகப்பட்டாராம்.
    இது தொடர்பாக 2011 டிச.29 ஆம் தேதி காலை வசந்திக்கும், மாரிமுத்துவுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறில் அருகிலிருந்த மண்ணெண்ணெயை எடுத்து வசந்தி மீது ஊற்றி மாரிமுத்து தீ வைத்து விட்டார். காயமடைந்த வசந்தி சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி 2012 ஜன. 3 ஆம் தேதி வசந்தி இறந்தார்.
     இதுகுறித்து கீழ்வேளூர் போலீஸார் வழக்குப் பதிந்து மாரிமுத்துவை கைது செய்தனர். இந்த வழக்கு நாகை மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
     வெள்ளிக்கிழமை விசாரணை முடிவுக்கு வந்த நிலையில், மாரிமுத்துவுக்கு ஆயுள் தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி எஸ். செல்வசுந்தரி தீர்ப்பளித்தார். அபராதம் கட்டத் தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai