Enable Javscript for better performance
திட்டை: 11 கோயில்களில் குடமுழுக்கு- Dinamani

சுடச்சுட

    

    சீர்காழி அருகே உள்ள திட்டை கிராமத்தில் 11 கோயில்களுக்கு ஞாயிற்றுக்கிழமை குடமுழுக்கு நடைபெற்றது.
     திட்டை ஸ்ரீகொள்ளுமேட்டாள் (எ) மகாமாரியம்மன் கோயில் விநாயகர், காளியம்மன், ஐயப்பன், தூண்டிக்காரன், பிடாரிஅம்மன், காத்தவராயன், கன்னியம்மன், உத்திராபதியார், பாலமுருகன், மன்மதன் ஆகிய 11 கோயில்களில் திட்டை கிராம மக்கள் சார்பில் நடைபெற்று வந்த திருப்பணிகள் நிறைவு பெற்றதையடுத்து, குடமுழுக்குக்கான அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் மற்றும் முதல் கால யாகசாலை பூஜை வெள்ளிக்கிழமை தொடங்கின. தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நான்காம் கால யாகசாலை பூஜைக்குப் பின்னர், கடம் புறப்பாடாகி முதலில் விநாயகர் கோயிலுக்கும் தொடர்ந்து, மகாமாரியம்மன், காளியம்மன், ஐயப்பன், தூண்டிக்காரன், பிடாரிஅம்மன், காத்தவராயன், கன்னியம்மன், உத்திராபதியார், பாலமுருகன், மன்மதன் ஆகிய கோயில்களிலும் குடமுழுக்கு நடைபெற்றது. ஒரே நாளில் 11கோயில்களுக்கு நடைபெற்ற இந்த குடமுழுக்கில் திட்டை மட்டுமின்றி அருகில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai