சுடச்சுட

    

     பொலிவுறு நகரத் திட்டத்தில் நாகூரை சேர்க்கக் கோரிக்கை

    By DIN  |   Published on : 05th September 2016 12:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மத்திய அரசின் பொலிவுறு நகரம் திட்டத்தில் நாகூரை சேர்க்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
     இதுகுறித்து நாகூர் தர்காவின் ஆலோசனைக் குழுத் தலைவர் செய்யது முஹம்மது கலிபா சாஹிபு, இந்திய பிரதமர் மற்றும் தமிழக முதல்வருக்கு அனுப்பிய கோரிக்கை மனு:
     பொலிவுறு நகரம் திட்டத்துக்காக மத்திய அரசு ரூ.48 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கியுள்ளது. தேர்வு செய்யப்பட்ட நகரின் மேம்பாட்டுக்காக ஆண்டுக்கு ரூ.100 கோடி என 5 ஆண்டுக்கு செலவிடப்படும். இதன்மூலம் அந்த நகரின் கட்டமைப்பு வசதிகள் மேம்படும். இதற்காக முதலில் 20 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டன. தென்னிந்தியாவில் மிகப்பெரிய தர்காவை கொண்டுள்ள நாகூரையும் இத்திட்டத்தில் சேர்க்கக் கோரி சம்பந்தப்பட்ட அனைவருக்கும் கோரிக்கை மனு அனுப்பப்பட்டிருந்தது. இந்நிலையில், மேலும் 40 புதிய நகரங்கள் பொலிவுறு திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் நாகூரையும் சேர்க்க வேண்டுமென, மத்திய அரசை தமிழக முதல்வர் வலியுறுத்த வேண்டும்.
     நாகூரின் பாரம்பரிய வரலாற்றையும், நாகூர் தர்காவின் மத நல்லிணக்க மாண்பை சிறப்பிக்கும் வகையிலும், நகரங்கள் பொலிவுறு திட்டத்தில் நாகூரையும் மத்திய அரசு சேர்க்க வேண்டும் என்று கோரியுள்ளார்.
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai