சுடச்சுட

    

    சீர்காழி விநாயகர் கோயில்களில் சிறப்பு வழிபாடு: 4 சிலைகள் விசர்ஜனம்

    By DIN  |   Published on : 06th September 2016 07:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விநாயகர் சதுர்த்தியையொட்டி, சீர்காழியில் உள்ள விநாயகர் கோயில்களில் திங்கள்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து, 4 விநாயகர் சிலைகள் உப்பனாற்றில் விசர்ஜனம் செய்யப்பட்டன.
    சீர்காழியில் ஆபத்துகாத்த விநாயகர், செங்கழுநீர் விநாயகர், மங்கள விநாயகர், செல்வ விநாயகர், சித்தி விநாயகர், தான்தோன்றி  செல்வ விநாயகர் உள்ளிட்ட 31 இடங்களில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. தொடர்ந்து கணபதி ஹோமம், மூலவர் விநாயகருக்கு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது.
    மோதகம் வைத்து நிவேதனம் செய்து தீபாராதனை நடைபெற்றது. பின்னர், பிடாரி வடக்கு வீதி மங்கள விநாயகர், ஈசானியத் தெரு தான்தோன்றி செல்வ விநாயகர், கீழதெரு மங்கள விநாயகர், தென்பாதி உதயபானு விநாயகர் ஆகிய நான்கு விநாயகர் சிலைகள் வாணவேடிக்கையுடன், மேள, தாளங்கள் முழங்க முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாகப் புறப்பட்டு உப்பனாற்றில் விசர்ஜனம் செய்யப்பட்டது.
    மயிலாடுதுறையில்...
    மயிலாடுதுறை காவேரி நகர் அரசமரத்தடி விநாயகர்,  ஸ்ரீமயூரநாதர் மேலவீதி ஸ்ரீஆழிகாட்டி விநாயகர், சின்னக்கடைத்தெரு ஸ்ரீசித்தி விநாயகர், மஞ்சள் வாய்க்கால் ஸ்ரீகற்பக விநாயகர் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai