சுடச்சுட

  

  நாகை மாவட்ட ஓய்வூதியர் குறைதீர் கூட்டம் நாகை மாவட்ட ஆட்சியரகத்தில் செப். 20-ஆம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறும் என நாகை மாவட்ட ஆட்சியர் சு. பழனிசாமி தெரிவித்துள்ளார்.
  இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
  செப். 20-ஆம் தேதி நடைபெறவுள்ள ஓய்வூதியர் குறைதீர் கூட்டத்தில், சென்னை ஓய்வூதிய இயக்குநர் பங்கேற்கிறார்.
  இதுவரை ஓய்வூதியப் பயன் கிடைக்கப் பெறாத ஓய்வூதியதாரர்கள், தங்கள் கோரிக்கை மனுக்களை இரட்டைப் பிரதிகளில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்கு), மாவட்ட ஆட்சியர் அலுவலகம், நாகப்பட்டினம் என்ற முகவரிக்கு செப். 10-ஆம் தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.
  மனுக்களுடன் பெயர், பதவி மற்றும் முகவரி, ஓய்வு பெறும் பணியாற்றிய அலுவலகம், ஓய்வு பெற்ற தேதி, ஓய்வூதியம் தொடர்பான குறைகள் விவரம், குறைகள் எந்த அலுவலகத்தில் நிலுவையில் உள்ளது, ஓய்வூதிய கொடுப்பாணை எண் போன்ற விவரங்களை இணைத்து அனுப்ப வேண்டும் என ஆட்சியர் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai