செப். 8-இல் பேச்சாவடி ஸ்ரீகுபேர சாய்பாபா கோயில் குடமுழுக்கு
By DIN | Published on : 06th September 2016 07:11 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
மயிலாடுதுறையை அடுத்த பேச்சாவடி, சக்திவேல் மெளனசுவாமிகள் மடத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள ஸ்ரீகுபேர சாய்பாபா கோயிலின் அஷ்டபந்தன மகா குடமுழுக்கு விழா வியாழக்கிழமை (செப். 8) நடைபெறவுள்ளது.
குடமுழுக்குப் பணிகள், புதன்கிழமை (செப். 7) அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமங்களுடன் தொடங்குகிறது. வியாழக்கிழமை காலை 9 மணிக்கு நடைபெறும் 2 ஆம் கால யாகபூஜைக்குப் பின்னர், 10 மணியளவில் குடமுழுக்கு நடைபெறுகிறது. மாலை 5 மணிக்கு சதாசிவ மூர்த்திகளின் 12 ஆம் ஆண்டு வருடாந்திர பூஜை மற்றும் மகா அபிஷேகம் நடைபெறுகிறது.