சுடச்சுட

    

    திருக்களாச்சேரி  ஸ்ரீபத்ரகாளியம்மன் கோயில் குடமுழுக்கு விழா

    By DIN  |   Published on : 06th September 2016 07:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாகை மாவட்டம், தரங்கம்பாடி வட்டம், திருக்களாச்சேரியில் உள்ள ஸ்ரீபத்ரகாளியம்மன் கோயிலின் குடமுழுக்கு விழா திங்கள்கிழமை காலை நடைபெற்றது.
    அம்பாள் பேழையிலிருந்து அருள்பாலிக்கும் 7 திருக்கோயில்களில் ஒன்றாக விளங்குகிறது, திருக்களாச்சேரி ஸ்ரீபத்ரகாளியம்மன் கோயில். இக்கோயிலின் குடமுழுக்கு விழா யாகபூஜைகள் ஞாயிற்றுக்கிழமை இரவு தொடங்கி நடைபெற்றது.
    திங்கள்கிழமை காலை யாக பூஜையின் நிறைவில், கடம் புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, காலை 10 மணிக்கு வேத, மந்திரங்கள் முழங்க ஸ்ரீபத்ரகாளியம்மன் கோயில் குடமுழுக்கு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், நாகை, திருவாரூர் மாவட்டங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
    5 ஆண்டுகளுக்குப் பின்னர் அம்பாளுக்கு பூஜை: இக்கோயிலில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே அம்பாளுக்கு பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம்.
    இந்த பூஜை காலத்தில் மட்டுமே பக்தர்கள், அம்பாளை காண முடியும். இதன்படி, 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே நடைபெறும் பூஜை, செப். 7, 8 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இதையொட்டி, ஸ்ரீநாகநாதசுவாமி கோயிலிலிருந்து மகா வரிசை கொண்டு வரும் நிகழ்ச்சி செப். 6-ஆம் தேதி மாலை தொடங்கி, செப். 7-ஆம் தேதி காலை கோயிலை
    வந்தடையும்.
    இதைத் தொடர்ந்து, அம்பாளுக்குப் பெரும்படையல்களிட்டு, மகா தீபாரதனை நடைபெறும். செப். 7, 8 ஆகிய தேதிகளில் 5 ஆண்டுகளுக்குப் பின்னர், அம்பாள் பேழையிலிருந்து வெளியே வந்து பக்தர்களுக்குக் காட்சியளிக்கும் நிகழ்ச்சி நடைபெறுவதால், பக்தர்களின் வசதிக்காக விரிவான முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai