Enable Javscript for better performance
திருமருகலில் விநாயகர் சதுர்த்தி விழா- Dinamani

சுடச்சுட

    

    திருமருகல் ஒன்றியத்தில் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலை ஊர்வலம் திங்கள்கிழமை நடைபெற்றது.
    திருமருகல் அருகேயுள்ள கட்டுமாவடி சிவன்கோயிலில் இருந்து ஸ்ரீசித்தி விநாயகர் சிலை  ஊர்வலத்தை ஒன்றிய பாஜக தலைவர்  சத்தியவிஜயன் தொடங்கி வைத்தார். ஊர்வலமானது, கட்டுமாவடி, வாழமங்கலம், பிராக்கிராமம், தண்டாளம், திட்டச்சேரி, ப.கொந்தகை, மரைக்கான்சாவடி வழியாக சென்று, நாகூர் வெட்டாற்றில் சித்தி விநாயகர் சிலை கரைக்கப்பட்டது. இதேபோல் ப.கொந்தகை, ஆதினக்குடி, குருவாடி, திருப்புகலூர், திருக்கண்ணபுரம், அனந்தநல்லூர் ஆகிய ஊர்களிலிருந்து விநாயகர் சிலைகள் ஊர்வலம் புறப்பட்டு நாகூர் வெட்டாறுக்கு வந்தது. பின்னர் அங்கு விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன. இதையொட்டி, போலீஸார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai