சுடச்சுட

    

    சீர்காழி அருகேயுள்ள விளந்திடசமுத்திரம் ஊராட்சியில் கட்டப்பட்டு வரும் பயணிகள் நிழற்குடையை சட்டப்பேரவை உறுப்பினர் பி.வி. பாரதி, ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    சீர்காழி ஊராட்சி ஒன்றியம், விளந்திடசமுத்திரம் ஊராட்சியில் ஒன்றிய பொதுநிதி ரூ. 5 லட்சம்  செலவில் பயணிகள் நிழற்குடை கட்டும் பணிகள் நடைபெற்று, நிறைவடையும் நிலையில் உள்ளன.
    இப்பணியை சட்டப்பேரவை உறுப்பினர் பி.வி. பாரதி பார்வையிட்டு, பணிகளை முழுமையாக விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவிட வேண்டும் என ஊராட்சி நிர்வாகத்திடம் அறிவுறுத்தினார்.
    ஆய்வின்போது, ஒன்றிய அதிமுக செயலர் ஜெய. ராஜமாணிக்கம், ஊராட்சித் தலைவர்  உம்மல்பஜ்ஜிரியா, ஊராட்சி செயலர்  அப்துல்சத்தார், அபுசாலி, ஏ.வி. மணி, புகழேந்தி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai