சுடச்சுட

    

    திருமருகலில் ஆற்றில் மண் அள்ளிய கல்லூரி மாணவி மீது மண் சரிந்து விழுந்ததில் திங்கள்கிழமை இறந்தார்.
    திருமருகல், ஆற்றங்கரைத்தெருவைச்  சேர்ந்தவர் சுப்ரமணியன் மகள் கவுதமி (24). கல்லூரி மாணவி. இவர் திங்கள்கிழமை காலை வீட்டுக்கு அருகில் உள்ள முடிகொண்டான் ஆற்றுக்கு மண் அள்ளுவதற்காக சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் கவுதமி வராததால், அவரது வீட்டினர் ஆற்றுக்கு வந்துள்ளனர். அங்கு, மணலில் கை மட்டும் வெளியே தெரிந்துள்ளது. இதையடுத்து திருமருகல் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் வந்து மணலை அகற்றி கவுதமியை மீட்டனர். பின்னர் திருமருகல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கவுதமி கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai