சுடச்சுட

    

    மாணவர்கள் படிப்பில் கற்பூரமாகத் திகழ வேண்டும் என தமிழக கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் கூறினார்.
    வேதாரண்யத்தை அடுத்த ஆயக்காரன்புலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு ரூ. 2.11 கோடியில் ஆய்வகத்துடன் கூடிய 14 வகுப்பறைகளைக் கொண்ட புதிய கட்டடம் கட்டும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.
    இதற்கான கட்டுமானப் பணியை  அமைச்சர் ஓ.எஸ். மணியன் தொடங்கிவைத்துப் பேசியது: நாகை மாவட்ட அளவில் உள்ள அரசுப் பள்ளிகளில், ஆயக்காரன்புலம் பெண்கள் பள்ளி பொதுத் தேர்வுகளில்  தொடர்ந்து பல ஆண்டுகளாக சிறப்பிடம் பெற்று வருவது பாராட்டுக்குரியது.
    கிருபானந்தவாரியார், மாணவர்களது புத்தியை கற்பூரம், கரித்துண்டு, வாழைத்தண்டு என மூன்று வகைகளாகப் பிரித்து விவரித்துள்ளார். மாணவர்கள், படிப்பில் கற்பூரமாகவே திகழ வேண்டும் என்றார்.
    நிகழ்ச்சியில் மாவட்டக் கல்வி அலுவலர் வேதரெத்தினம், பள்ளி தலைமையாசிரியர் தமிழ்ச்செல்வி, வட்டார மருத்துவ அலுவலர் சுந்தரராஜன், ஊராட்சித் தலைவர்கள் கிரிதரன், துரைராஜ், ஒன்றியக்குழு உறுப்பினர் முருகேசன், முன்னாள் உறுப்பினர் சரவணன், கிராம நிர்வாக அலுவலர் சங்க முன்னாள் தலைவர் ராதாகிருஷ்ணன், வழக்குரைஞர்கள் சுப்பையன், காசிநாதபாரதி, கூட்டுறவு சங்கத் தலைவர்கள் நமசிவாயம், இலக்குவன், வீரமணி, எழிலரசு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai